அரசு சட்டக் கல்லூரி – தருமபுரி
தருமபுரி அரசு சட்டக் கல்லூரி, 2017-2018 ஆம் கல்வியாண்டில் தொடங்கப்பட்டு தருமபுரி நகரில் சி.கே. ஸ்ரீனிவாசாராவ் தெருவில் நகராட்சி பெண்கள் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வந்தது. 2021-2022 ம் கல்யிாண்டிலிருந்து காரிமங்கலம் தாலுகா, பைசுஹள்ளியில் சுமார் 7 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள நிரந்தர கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. கல்லூரிக்கான மாணவியர் விடுதி கல்லூரி வளாகத்திற்குள்ளும் மாணவர் விடுதி கல்லூரியிலிருந்து சுமார் 2 கி.மீ தொலைவிலும் கட்டப்பட்டுள்ளது. இக்கல்லூரியில் மூன்றாண்டு சட்டப் படிப்பில் 80 மாணவர்களும், ஐந்தாண்டு சட்டப் படிப்பில் 80 மாணவர்களும் மற்றும் இரண்டாண்டு சட்ட மேற்படிப்பில் 20 மாணவர்களும் ஒவ்வொரு வருடமும் புதிதாக சேர்க்கப்பட்டு செயல்பட்டு வருகிறது

கல்வி மற்றும் நிருவாக கட்டிடமானது, மொத்தமாக 1500 மாணவர்கள் ஒரே சமயத்தில் அமர்ந்து பயிலும் வசதி கொண்ட 25 வகுப்பு அறைகளுடன், கல்லூரி அலுவலகம், கல்லூரி முதல்வர் அறை, மாதிரி நீதி மன்றம், 200 பேர் வரை அமரும் குளிர்சாதன வசதியுடன் கூடிய கருத்தரங்க கூடம், 150 பேர் வரை அமரும் குளிர்சாதன வசதியுடன் கூடிய இரு சொற்பொழிவு அரங்கங்கள், காடிணாலி கருத்தரங்கம், உள்விளையாட்டு அரங்கம் மற்றும் பேராசிரியர்கள் அறை ஆகியவற்றை உள்ளடக்கி நான்கு தளங்களை கொண்டுள்ளது. குளிர்சாதன வசதியுடன் கூடிய கலையரங்கமானது 1164 நபர்கள் அமரும் வகையில் இரு தளங்களாக கட்டமைக்கப்பட்டுள்ளது. நூலகமானது 50 கணிபொறிகள் கொண்ட மின்னணு நூலகம், படிப்பகம், விவாத அரங்கம், பொருள் வைப்பகம் ஆகியவற்றை உள்ளடக்கி மூன்று தளங்களை கொண்டுள்ளது.

கல்லூரியிலிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள மாணவர் விடுதியானது மொத்தமாக 200 மாணவர்கள் தங்கும் வகையில் 77 அறைகள் கொண்ட நான்கு தளங்களாக கட்டமைக்கப் பட்டுள்ளது.

மாணவியரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கல்லூரின் குடியிருப்பு வளாகத்திலேயே கட்டப்பட்டுள்ள மாணவியர் விடுதியானது நான்கு தளங்களில், 77 அறைகளுடன் மொத்தமாக 200 மாணவிகள் தங்கும் வகையில், பூங்கா மற்றும் விளையாட்டு திடல் வசதியுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது.

Latest News

Inter-Collegiate-Moot-Court-Invitation
Click here to view


GLCDPI-MOOT-BROCHURE
Click here to view


GLCDPI-MOOT-Schedule-of-Events
Click here to view


© Copyright - Government Law College Dharmapuri
Skip to content